லூதியானா குண்டுவெடிப்பில் இறந்தவர் முன்னாள் போலீஸ்!
லூதியானா நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தவர் முன்னாள் போலீஸ்காரர் என பஞ்சாப் டிஜிபி தகவல்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் நேற்று 3வது தளத்தில் உள்ள கழிவறையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்துள்ளாதாகவும் தகவல் கூறப்பட்டது.
லூதியானா நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் டிஜிபி சித்தார்த், லூதியானா நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தவர் முன்னாள் போலீஸ்காரர்.
உயிரிழந்த முன்னாள் போலீஸ்காரர் ககன்தீப் சிங்குதான் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டை கொண்டு வந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் காவல்துறையில் இருந்து நீக்கப்பட்டு, 2 ஆண்டு அவர் சிறையில் இருந்துள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும், லூதியானா வெடிகுண்டு தாக்குதலில் காளிஸ்தான் பிரிவினை வாதிகளின் சதியும் இருப்பதாக கூறப்படுகிறது.