கைதுக்கான தடையை நீட்டிக்கக் கோரி கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் உச்சநீதிமன்றத்தில் மனு
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ விசாரணைக்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் சிபிஐ விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின் சிபிஐ தரப்பில் இரண்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது , உச்சநீதிமன்றம் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமார் , மேற்கு வங்க டிஜிபி மற்றும் மேற்கு வங்க தலைமைச்செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகும் போது விசாரிக்கலாம், ஆனால் கைது செய்யக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பின் வழக்கில் கொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ்குமாரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
7 நாட்களில் கைது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.ஆனால் அதற்குள் உரிய நீதீமன்றத்தை அணுகி ராஜீவ்குமார் முன்ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இன்னிலீலையில் கைதுக்கான தடையை நீட்டிக்கக் கோரி கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.