பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார்!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்த அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான சோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறபட்டு உள்ளது. அவரது அலுவலக செயலாளர் மகேந்திர பாண்டே வெளியிட்டு உள்ள அறிக்கையில், டாக்டர்கள் அறிவுரையின் பேரில் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் வழக்கமான சோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று சேர்க்கப்பட்டு உள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கண்காணிப்பில் அவர் உள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமாக உள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கண்காணிப்பில் அவர் உள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.