காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ க்கள்

Default Image

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முன்னாள் எம்.எல்.ஏ க்கள் இருவர் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.

குஜராத் மாநிலம் பதான் மாவட்டம் ரதான்பூர் பகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் அல்பேஷ் தாக்கூர்.  காங்கிரஸ் கட்சி உடனான கருத்து மோதலால் தன் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் அணைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகி கொண்டார்.

கடந்த 5 ம் தேதி அல்பேஷ் தாக்கூர் மற்றும் பேயட் தொகுதி முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தவல் சிங் ஸாஸா இருவரும் குஜராத் மாநில பாஜக துணைத்தலைவர் நிதின் படேலை சந்தித்தனர்.இந்நிலையில் இன்று இருவரும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இதனால் குஜராத் சட்டமன்றத்தில் பாஜக எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் 71 ஆக குறைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்