உ.பியில் 3 முறை எம்.எல்.ஏவாக இருந்தவரை நடு ரோட்டில் கொலை செய்த கும்பல்.!
உத்திர பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் ட்ரைகோலியா படுவா பேருந்து நிலையத்தில் நில தகராறு பகை காரணமாக முன்னாள் எம்.எல்.ஏ நிர்வேந்திர குமார் மிஸ்ரா மற்றும் அவரது மகன் சஞ்சீவ் மிஸ்ரா ஆகியோரை ஒரு கும்பல் பலத்த ஆயுதங்களால் தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ நிர்வேந்திரகுமார் மிஸ்ரா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் சஞ்சீவ் மிஸ்ரா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று முறை உத்திர பிரதேசத்தில் எம்.எல்.ஏவாக இருந்த நிர்வேந்திரகுமார் மிஸ்ராவின் இறப்புக்கு காரணமானவர்களி உடனடியாக தண்டிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் ட்ரைகோலியா படுவா பேருந்து நிலையத்தில் மிஸ்ராவின் சடலத்தை வைத்து போராட்டம் நடத்தினர்.
இறந்துபோன மிஸ்ராவுக்கும், சமீர் குப்தா மற்றும் ராதேஷ்யம் குப்தா ஆகியோகும் நிலத்தகராறு இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த படுகொலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் உத்திர பிரதேச யோகி அரசு மீது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.