முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தனது ஆதரவாளர்களுடன் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.!

புதுச்சேரில் முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தனது ஆதரவாளர்களுடன், ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரேஸிலிருந்து விலகி, ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ காரணமாக இருந்த 4 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் லட்சுமி நாராயணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை இருக்கிறது. தங்கள்து கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணனுக்கு வாழ்த்துக்கள் என்றும் அவரது அரசியல் வளர்ச்சி மெம்மேலும் உயர வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025