முன்னாள் அமைச்சர் ராஜிந்தர் பால் சிங் தற்கொலை..!
சத்தீஸ்கரின் முன்னாள் அமைச்சரும்,பாஜக மூத்த தலைவருமான ராஜிந்தர் பால் சிங் பாட்டியா தற்கொலை செய்து கொண்டார்.
சத்தீஸ்கரின் முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜிந்தர் பால் சிங் பாட்டியா தற்கொலை செய்து கொண்டார். ராஜிந்தர் பால் சிங் பாட்டியா ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது, தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
ராஜிந்த்பால் சிங் பாட்டியா ராஜ்நந்த்கான் மாவட்டத்தின் குஜ்ஜி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தார். 2003 ஆம் ஆண்டில், ராஜிந்தர்பால் சிங் பாட்டியாவிற்கு பாஜக சார்பில் சட்டமற்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இதனுடன், அவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. இருப்பினும், 2008 தேர்தலில், அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. 2013 ஆம் ஆண்டில் வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால் அவர் இரண்டாவது இடத்தைப் பெற்றார்.
பாட்டியாவின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பாட்டியாவுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட பிறகு பாட்டியாவிற்கு சில உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.