மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்..!

Manohar Joshi

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி வயது தொடர்பான உடல்நலக் குறைபாடுகளால் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 86.

மனோகர் ஜோஷிக்கு நீண்ட காலமாக வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. அவருக்கு புதன்கிழமை இருதய கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள்  கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மனோகர் ஜோஷி காலமானார்.

READ MORE- தெலங்கானா எம்எல்ஏ லாஸ்யா நந்திதா சாலை விபத்தில் உயிரிழப்பு..!

மனோகர் ஜோஷியின் உடல் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாட்டுங்கா மேற்கு ரூபரேல் கல்லூரிக்கு அருகிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுகிறது. பின்னர் அவரது இறுதி ஊர்வலம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இறுதியாக, தாதர் மயானத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படும் என அவரது மகன் உன்மேஷ் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் இந்திய தேசிய காங்கிரஸின் சரத் பவாருக்குப் பிறகு, மாநிலத்தில் முதல் முறையாக சிவசேனா ஆட்சியை  கடந்த 1995 -ம் கொண்டு வந்தவர். 2006 முதல் 2012 வரை  நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், வாஜ்பாய் அரசு இருந்தபோது 2002 முதல் 2004 வரை மக்களவை சபாநாயகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்