Categories: இந்தியா

பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான்!

Published by
பாலா கலியமூர்த்தி

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார்.

ஏற்கனவே, அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மிலிந்த் தியோரா, பாபா சித்திக் ஆகியோர் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து அசோக் சவானும் விலகி இருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான்!

2008 டிசம்பரில் இருந்து 2010 நவம்பர் வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக பதவி வகித்த அசோக் சவான், 2014 முதல் 2019 வரை மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். காங்கிரஸில் இருந்து விலகிய அசோக் சவான், விரைவில் அவர் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய அசோக் சவான், பாஜகவில் இணைந்தார். மராட்டிய துணை முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமானார். மேலும், பாஜக சார்பில் மகாராஷ்ட்ராவில் இருந்து மாநிலங்களவைக்கு அசோக் சவான் போட்டியிட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Recent Posts

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

15 minutes ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

22 minutes ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

46 minutes ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

1 hour ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

2 hours ago

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

2 hours ago