2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி.? கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் பதில் இதுதான்…. .

HD Kumarsamy

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் பதில் அளித்துள்ளார். 

கடந்த கர்நாடக தேர்தலில் மிக முக்கிய கட்சியாக திகழும் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் HD குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியானது 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

முன்பு 20218 தேர்தல் முடிந்தவுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்று இருந்தார். தற்போது, மீண்டும் பாஜக உடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா என ஜனதா தளம் கட்சி தலைவர் குமரசாமியிடம் செய்தி நிறுவனம் கேட்டது.

அதற்கு பதில் கூறிய குமாரசாமி, தற்போதைக்கு எங்கள் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 2024 தேர்தல் சமயத்தில் இது குறித்து முடிவு எடுப்போம். என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list
trump tariffs
tariffs trump