கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார்!
பாஜகவில் இருந்து நேற்று விலகிய நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.
கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜகவில் இருந்து நேற்று விலகிய நிலையில், இன்று பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கேபிசிசி தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ரந்தீப் சுர்ஜேவாலா, சித்தராமையா ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்தபின் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், நேற்று பாஜகவில் இருந்து விலகி இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வரும், கட்சித் தலைவருமான ஒருவர் காங்கிரஸில் இணைவதால் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். பாஜக எனக்கு எல்லா பதவிகளையும் கொடுத்துள்ளது, கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளேன் என்று கூறினார்.