புல்வாமா தாக்குதல்.! அமைதியாக இருக்க பிரதமர் மோடி கூறினார்.! முன்னாள் ஆளுநர் பரபரப்பு பேட்டி.!

Published by
மணிகண்டன்

புல்வாமா தாக்குதல் பற்றி அமைதியாக இருக்கும்படி, பிரதமர் மோடி தன்னிடம் கூறினார் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பேட்டியளித்துள்ளார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த புல்வாமா தாக்குதலை தற்போது வரை இந்தியர்கள் மறந்திருக்க மாட்டார்கள. ஏனென்றால் ஒரே நேரத்தில் 40 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வீரமரணம் அடைந்தனர் . இந்த தாக்குதல் குறித்து அப்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராக பதவியில் இருந்த சத்தியபால் மாலிக் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை அண்மையில் ஓர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியாக அளித்துள்ளார்.

அந்த பேட்டி தற்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது. மேலும், காங்கிரஸ் கட்சி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பிரதமர் மோடி குறித்தும், பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

மாலிக் பேட்டி :

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் மாலிக், தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டி கூறுகையில், புல்வாமாவில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRBF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் திறமையின்மையின் விளைவு என கடுமையாக சாடினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங் ஆவார்.

விமானம் மறுப்பு :

மேலும், அந்த புல்வாமா தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் ராணுவ வீரர்களை அழைத்து செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது என்று கூறினார். ஆனால் ,மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டதன் காரணமாகவே, சிஆர்பிஎப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள் என்றும், சாலை மார்க்கமாக வீரர்கள் பகுதிகளிலும், பாதுகாப்பு அவர்களுக்கு திறம்பட ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதையும் மாலிக் குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடி வேண்டுகோள் :

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை அடுத்து பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொண்ட போது, பிரதமரிடம் இதுகுறித்து தான் கேள்வி எழுப்பியதாகவும், ஆனால் அப்போது பிரதமர், ‘இதைப் பற்றி வெளியே யாரிடமும் கூற வேண்டாம்.’ எனவும், ‘அமைதியாக இருக்குமாறு’ கேட்டுக் கொண்டார் எனவும் அதிர்ச்சி தகவலை ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் மாலிக் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வெடிமருந்து :

மேலும், பாகிஸ்தான் நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் வெடிமருந்துகளுடன் ஜம்மு காஷ்மீருக்குள் ஒரு வார காலமாக சுற்றித்திரிந்ததாகவும்,  ஆனால், அதனை உளவுத்துறை சரிவர கவனிக்காமல் இருந்ததாகவும் முன்னாள் ஆளுநர் மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டை மத்திய உளவுத்துறை மீது வைத்தார். இந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி எனவும் மாலிக் குறிப்பிட்டார். .

காங்கிரஸ் குற்றசாட்டு :

இந்த குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஆளுநர் மாலிக் கூறிய குற்றச்சாட்டுகளை பதிவிட்டு, 2019 நாடாளுமன்ற தேர்தலைக்காக தனது புகழை காப்பாற்றுவதற்காக புல்வாமா தாக்குதல் சம்பவத்தை பிரதமர் மோடி ‘அடக்கி’ விட்டார் என்று குற்றம் சாட்டியது. மேலும், 40 சிஆர்பிஎப் வீரர்களின் தியாகம் அரசாங்கத்தின் தவறு என்றும் குற்றம் சாட்டியது.

அதிர்ச்சி :

மேலும், அப்போது வீரர்களுக்கு விமானம் கிடைத்திருந்தால், தீவிரவாத சதி தோல்வி அடைந்திருக்கும். இந்த சம்பவத்தை பிரதமர் மோடி, மறைத்தது மட்டுமல்லாமல்அவரது  புகழை காப்பாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டார். புல்வாமா தாக்குதல் குறித்து சத்திய பால் மாலிக்கின் அறிக்கை கேட்டு நாடு முழுவதும் அதிர்ச்சி அடைந்துள்ளது என ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

9 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

9 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

10 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

13 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

2 days ago