முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பஞ்சாப்பை கைப்பற்றிய ஆம் ஆத்மி:
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, நாட்டில் டெல்லி மற்றும் பஞ்சாப்பை கைப்பற்றி 3வது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பஞ்சாப் சட்டசபை தேர்தல் வெற்றியை அடுத்து பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் முதல்வர் உள்பட 18 பேர் அமைச்சராக செயல்படலாம். ஆனால், 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பகவந்த் சிங் பதவியேற்பு குறித்து ஹர்பஜன் சிங் ட்வீட்:
ஆம் ஆத்மி கட்சிக்கு புதிய முதலமைச்சரான எனது நண்பர் பகவந்த் சிங் மானுக்கும் எனது வாழ்த்துக்கள். சொந்த கிராமமான கட்கர்கலானில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதை கேட்பதில் மகிழ்ச்சி. என்ன ஒரு புகைப்படம். அம்மாவுக்கு பெருமையான தருணம் என்று முன்னாள் இந்திய அணியின் வீரர் ஹர்பஜன் சிங் பதிவிட்டிருந்தார்.
ஆம் ஆத்மி கட்சியில் ஹர்பஜன் சிங்:
பகவ்ந்த் சிங் பதவியேற்பு குறித்து பதிவிட்டிருந்ததை அடுத்து ஹர்பஜன் சிங் விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் இணைய உள்ளதாகவும், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
பஞ்சாப் மாநிலங்களவை இடங்கள்:
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 5 இடங்கள் மாநிலங்களவையில் காலியாக உள்ளதால் அதில், ஹர்பஜன் சிங் ஒருவராக தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநிலங்களவை எம்பி ஆகிறார் ஹர்பஜன் சிங்:
நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பி ஆகிறார் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஹர்பஜன் சிங் போட்டியிடுகிறார் என்று தகவல் கூறப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சி பரிந்துரை:
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி சட்டமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா, ஐஐடி-டெல்லி இணைப் பேராசிரியர் சந்தீப் பதக் ஆகியோரை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சி பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நிலையில், தற்போது ஹர்பஜனும் தேர்வாக உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்து மக்களவை எம்.பியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…