மாநிலங்களவை எம்பி ஆகிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்?

Default Image

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பஞ்சாப்பை கைப்பற்றிய ஆம் ஆத்மி:

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, நாட்டில் டெல்லி மற்றும் பஞ்சாப்பை கைப்பற்றி 3வது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பஞ்சாப் சட்டசபை தேர்தல் வெற்றியை அடுத்து பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் முதல்வர் உள்பட 18 பேர் அமைச்சராக செயல்படலாம். ஆனால், 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பகவந்த் சிங் பதவியேற்பு குறித்து ஹர்பஜன் சிங் ட்வீட்:

ஆம் ஆத்மி கட்சிக்கு புதிய முதலமைச்சரான எனது நண்பர் பகவந்த் சிங் மானுக்கும் எனது வாழ்த்துக்கள். சொந்த கிராமமான கட்கர்கலானில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதை கேட்பதில் மகிழ்ச்சி. என்ன ஒரு புகைப்படம். அம்மாவுக்கு பெருமையான தருணம் என்று முன்னாள் இந்திய அணியின் வீரர் ஹர்பஜன் சிங் பதிவிட்டிருந்தார்.

ஆம் ஆத்மி கட்சியில் ஹர்பஜன் சிங்:

பகவ்ந்த் சிங் பதவியேற்பு குறித்து பதிவிட்டிருந்ததை அடுத்து ஹர்பஜன் சிங் விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் இணைய உள்ளதாகவும், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

பஞ்சாப் மாநிலங்களவை இடங்கள்:

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 5 இடங்கள் மாநிலங்களவையில் காலியாக உள்ளதால் அதில், ஹர்பஜன் சிங் ஒருவராக தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநிலங்களவை எம்பி ஆகிறார் ஹர்பஜன் சிங்:

நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பி ஆகிறார் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஹர்பஜன் சிங் போட்டியிடுகிறார் என்று தகவல் கூறப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சி பரிந்துரை:

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி சட்டமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா, ஐஐடி-டெல்லி இணைப் பேராசிரியர் சந்தீப் பதக் ஆகியோரை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சி பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நிலையில், தற்போது ஹர்பஜனும் தேர்வாக உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்து மக்களவை எம்.பியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்