ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் கவர்னர் ஜக்மோகன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் கவர்னர் ஜக்மோகன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிறத்தல் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஜக்மோகன் ஜியின் மறைவு நம் தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு. அவர் ஒரு முன்மாதிரியான நிர்வாகி மற்றும் புகழ்பெற்ற அறிஞர். அவர் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர். அவரது பதவிக்காலம் புதுமையான கொள்கை வகுப்பால் குறிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.’ என பதிவிட்டுள்ளார்.
மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ஸ்ரீ ஜக்மோகன் ஜி, ஜம்மு & காஷ்மீர் ஆளுநராக இருந்த அவரது குறிப்பிடத்தக்க பதவிக்காலம் எப்போதும் நினைவுகூரப்படும். ஒரு திறமையான நிர்வாகி மற்றும் நாட்டின் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான முக்கிய முடிவுகளை எடுத்த ஒரு தீவிர அரசியல்வாதி. அவரது சோகமான மறைவுக்கு இந்தியா இரங்கல் தெரிவிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி’ என பதிவிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…