தூக்கில் தொங்கிய நிலையில் முன்னாள் ஆளுநர்..தற்(அ)கொலையா? தீவிர விசாரனை
நாகலாந்து மணிப்பூர் மாநிலங்களின் முன்னாள் ஆளுநரும் சிபிஐ முன்னாள் இயக்குநருமான அஸ்வின் குமார் சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக
மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 2008 முதல் 210 வரை சிபிஐ இயக்குநராக பொறுப்பு வகித்த அஸ்வினி குமார் கடந்த 2014ல் நாகலாந்து ஆளுநராகவும் 2013ல் மணிப்பூர் ஆளுநராக சிறிது காலம் பொறுப்பு வகித்தார்.ஓய்வுக்கு பிறகு சிம்லாவில் தனியார் பல்கலைக்கழகத்தில் வேந்தராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் போலிச்சான்றிதழ் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் அஸ்வினி குமார் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில் சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.இது தற்கொலையா? அல்லது கொலையா? என்று கோணத்தில் போலீசார் விசாரணைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.