அரசியலிலிருந்து விலகினார் முன்னாள் கால்பந்து வீரர் பாய்ச்சங் பூட்டியா !!

Bhaichung Bhutia

பாய்ச்சுங் பூட்டியா: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பைச்சுங் பூட்டியா தற்போது அரசியலிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறார். சிக்கிமில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகுவதாகக் அவர் கூறி இருக்கிறார்.

இவர் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் துணை ஜனாதிபதி ஆவார். சமீபத்தில் முடிவடைந்த 2024 ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலில் பாய்ச்சங் பூட்டியா, சிக்கிம் ஜனநாயக முன்னணி (Sikkim Democratic Front-SDF) கட்சியின் சார்பாக போட்டியிட்டு தோல்வியை அடைந்தார்.

இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 6-வது முறையாக தேர்தலில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வியின் காரணமாகவே தற்போது இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்.

இது குறித்து அவர் பேசிய போது,” சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிஎஸ் தமங் மற்றும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) ஆகியோருக்கு நான் இப்பொது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்து முடிந்த 2024 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தேர்தல் அரசியல் எனக்கு மட்டும் இல்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே அனைத்து வகையான தேர்தல் அரசியலிலிருந்தும் உடனடியாக விலகுகிறேன்”, என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்