நான் பிச்சைக்காரன் இல்லை.! பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் துணை முதல்வர் காட்டம்.!

Default Image

கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வராக இருந்த லக்ஷ்மன் சவடி நேற்று பாஜக முக்கிய பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார்.

கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே காங்கிரஸ் கட்சி இரண்டு கட்டங்களாக தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர். மீதம் உள்ள வேட்பாளர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக வேட்பாளர் :

அதே போல, பாஜக சார்பில் நேற்று முதற்கட்டமாக 189 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அத்தானி தொகுதியில் போட்டியிட மகேஷ் குமத்தல்லியை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது. அங்கு கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்ட லக்ஷ்மன் சவடிக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் கும்டஹள்ளியிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்ஷ்மன் சவடி விலகல் :

அத்தானி தொகுதியில் போட்டியிட்டு லக்ஷ்மன் சவடி தோல்வியடைந்ததை தொடர்ந்து தான் மகேஷ் குமத்தல்லி பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது என கூறப்படுகிறது. இதனை அடுத்து தான் தற்போது பாஜகவில் இருந்து லக்ஷ்மன் சவடி விலகியுள்ளார் என கூறப்படுகிறது. அவர் பாஜக ஆட்சி காலத்தில் துணை முதல்வராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிச்சை பாத்திரம் :

இதுகுறித்து லக்ஷ்மன் சவடி கூறுகையில் , நான் எனது முடிவை எடுத்துள்ளேன். நான் பிச்சை பாத்திரத்துடன் சுற்றுபவன் அல்ல. நான் சுயமரியாதை உள்ள அரசியல்வாதி. யாருடைய செல்வாக்கிலும் நான் செயல்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், இன்று தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் லக்ஷ்மன் சவடி ஈடுபட உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்