கர்நாடக முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவடி காங்கிரஸில் இணைந்தார்..!
கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமானலட்சுமண் சவடி காங்கிரசில் இணைந்தார்.
பாஜக முன்னாள் தலைவரும், கர்நாடகா முன்னாள் துணை முதல்வருமான லக்ஷ்மண் சவடி இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரஸில் இணைந்ததாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் :
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே காங்கிரஸ் கட்சி இரண்டு கட்டங்களாக தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர். மீதம் உள்ள வேட்பாளர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக வேட்பாளர் :
அதன்படி, பாஜக சார்பில் முதற்கட்டமாக 189 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அத்தானி தொகுதியில் போட்டியிட மகேஷ் குமத்தல்லியை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது. அத்தானி தொகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்ட லக்ஷ்மன் சவடி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் கும்டஹள்ளியிடம் தோல்வியடைந்ததால் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
லக்ஷ்மன் சவடி விலகல் :
அத்தானி தொகுதியில் போட்டியிட்டு லக்ஷ்மன் சவடி தோல்வியடைந்ததை தொடர்ந்து தான் மகேஷ் குமத்தல்லி பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது என கூறப்படுகிறது. இதனை அடுத்து, சட்டப் பேரவை உறுப்பினர் பதவியையும், பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து, பாஜகவில் இருந்து லக்ஷ்மன் சவடி விலகியுள்ளார். அவர் பாஜக ஆட்சி காலத்தில் துணை முதல்வராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸில் இணைந்தார் :
இந்நிலையில், கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மண் சவடி, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து (பாஜக) ராஜினாமா செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையாவுடன் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தினார். தற்பொழுது, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், லக்ஷ்மண் சவடி காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை உறுதிப்படுத்தினார்.