டெல்லி மதுபான கொள்கை முறைகேடு.! மணீஷ் சிசோடியா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்.!
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆஜர் படுத்தப்பட உள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாகவும், அதில், அரசுக்கு பல கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாகவும், ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
சிசோடியா கைது : கடந்த ஞாயிற்று கிழமை அவரது இல்லத்தில் வைத்து சிபிஐ காவல்துறையினர் சுமார் 8 மணிநேரம் ஆலோசனை செய்து அதன் பிறகு, அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறி கைது செய்தனர். பின்னர் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் ஆஜர் : இந்த உத்தரவை அடுத்து அவர் 5 நாள் நீதிமன்ற காவல் முடிந்து இன்று மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட உள்ளார். இதனால் நீதிமன்றம் முன் ஏராளாமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.