அரசியல் பொறுப்பில் இருந்து என்னை விடுவிங்கள்… பாஜக தலைமைக்கு கம்பீர் திடீர் கோரிக்கை!

Gautam Gambhir

Gautam Gambhir : அரசியல் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கோரிக்கை.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டு, அதே ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட வெற்றி பெற்றார். அன்றிலிருந்து மக்களவை உறுப்பினராகவும், ஐபிஎல் அணி ஆலோசகராகவும் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.

Read More – தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் வயது 85 ஆக உயர்வு..!

தற்போது கூட வரவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனில் கொல்கத்தா நைட்ரிடர்ஸின் (கே.கே.ஆர்) வழிகாட்டியாக மீண்டும் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். இதனால், அவரது கிரிக்கெட் சார்ந்த செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த சூழலில் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பாஜகவில் கவுதம் கம்பீருக்கு மீண்டும் சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்… IED வெடிகுண்டு.. அடுத்தடுத்து வெளியாகும் சிசிடிவி காட்சிகள்!

இந்த நிலையில், அரசியலில் இருந்து விலக முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் முடிவு எடுத்து அறிவித்துள்ளார். அதாவது கிரிக்கெட் பொறுப்புகள் இருப்பதால், அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுவிக்க கோரி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக கவுதம் கம்பீர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கிரிக்கெட் போட்டித் தொடர்களில் கவனம் செலுத்த உள்ளதால், அரசியல் பொறுப்புகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு பாஜக தலைவர் ஜேபி நட்டாவை கேட்டுக் கொள்கிறேன்.

Read More – ரவா இட்லி ஆர்டர் செய்த ‘ராமேஸ்வரம் கஃபே’ குற்றவாளி.! வெளியான பரபரப்பு தகவல்கள்…

இதனால் எனது வரவிருக்கும் கிரிக்கெட் போட்டி தொடர்களில் கவனம் செலுத்த முடியும் என கூறியுள்ள கம்பீர், மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் மனமார்ந்த நன்றி, ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டுள்ளார். கவுதம் கம்பீரின் இந்த முடிவு நிரந்தரமா? அல்லது வேறு எதும் முடிவு இருக்கா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மற்றும் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்