கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 30.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா உடல் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தற்கொலையா..? அல்லது வேறு காரணமா..? என்பது இன்னும் தெரியவில்லை. தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதும், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும் அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சௌந்தர்யாவுக்கு நான்கு மாத குழந்தை உள்ளது. சௌந்தர்யா உடல் பௌரிங் அண்ட் லேடி கர்சன் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…