ஷிவமோகா விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பெயரிட உள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
கர்நாடகாவின் ஷிவமோகாவில் கட்டப்பட்டுள்ள புதிய விமானநிலையத்திற்கு, கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா விமான நிலையம், என பெயரிட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். எடியூரப்பாவின் பெயரில் விமான நிலையத்திற்கு பெயர் வைக்க மாநில அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அவர் கூறினார்.
பிப்ரவரி 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த விமான நிலையத்தை திறந்து வைப்பார் என்றும், பெங்களூருக்கு அடுத்தபடியாக மாநிலத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக ஷிவமோகா உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஷிமோகாவில் இந்த விமான நிலைய கட்டுமானப் பணிகள் வெறும் 18 மாதங்களில் முடிவடைந்துள்ளது.
இந்த விமான நிலையத்தால், கல்வி, தொழில், பொருளாதாரம், சுற்றுலா உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மாவட்டம் வளர்ச்சி அடையும் என்று பொம்மை மேலும் கூறினார்.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…