சிஐடி விசாரணைக்கு ஆஜரானார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ..!!
எடியூரப்பா: எடியூரப்பா முன்னாள் முதலவரான எடியூரப்பா அவர் மீது தொடுத்துள்ள போக்சோ வழக்கின் விசாரணைக்கு இன்று சிஐடி முன்பு ஆஜராகி இருக்கிறார்.
பெங்களூரு, சதாசிவ நகர் காவல் நிலையத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். கடந்த பிப். 2 ஆம் தேதி டாலர்ஸ் காலனி இல்லத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பெண் ஒருவர் தனது 17 வயது மகளுக்கு முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதன்படி எடியூரப்பா மீது போக்சோ சட்டப் பிரிவு 8, இந்தியத் தண்டனை சட்டப் பிரிவு 354 ஏ இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டை மறுத்ததுடன் இது ஒரு சதி என்றும் இதற்கான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்றும் எடியூரப்பா அப்போது கூறி இருந்தார். இந்நிலையில், கடந்த ஜூன்-17 ம் தேதி அன்று போக்சோ வழக்கில் ஜூன் 17 (இன்று)சிஐடி விசாரணைக்கு ஆஜராகவிருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்த நிலையில், இன்று சிஜடி முன்பு ஆஜராகியுள்ளார்.
மேலும், இந்த ஜூன்-17ம் தேதி (இன்று) சிஐடி விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்தபடி தற்போது இன்று காலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பா சிஐடி முன்பு இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார்.