முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு! நாளை கர்நாடகாவில் பொதுவிடுமுறை!
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவையொட்டி நாளை (11.12.2024) கர்நாடகாவில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகம் : முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை 2.45 மணியளவில் தன்னுடைய வீட்டில் காலமானார். அவர் இறந்ததை தொடர்ந்து அவருடைய இறப்புக்கு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இவருடைய இறுதிச்சடங்கு நாளை (11.12.2024) அரசு மரியாதையுடன், மத்தூர் தாலுகா, ஹூத்துரா, மாண்டியா மாவட்டம், சோமனஹள்ளி ஸ்வகிராமில் நடைபெறவுள்ளது. அங்கு அவருடைய உடல் தகனுமும் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், அவருடைய மறைவை துக்க நிகழ்வாக அனுசரிக்கப்படவேண்டும் என்பதால், நாளை (11.12.2024) புதன்கிழமை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை விடப்படுவதாக கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதே சமயம், 10.12.2024 முதல் தேதி 12.12.2024 வரை (இரண்டு நாட்களும் உட்பட) மூன்று நாட்கள் மாநிலம் முழுவதும் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்பதால் இந்த நாட்களில் எந்தவொரு பொது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது நடத்துவதாக இருந்த நிகழ்ச்சிகள் தடைசெய்யப்படும். இந்த நாட்களில் அனைத்து மாநில அரசு கட்டிடங்களிலும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில் கர்நாடகா அரசு அறிவித்திருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெரும் சோகம்.! அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்!
March 26, 2025
GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!
March 25, 2025
GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!
March 25, 2025
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!
March 25, 2025