பாஜகவுடன் கூட்டணி உறுதியானது என்று பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் அறிவிப்பு.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், அக்கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதன்பின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். அதன்படி, புதிய கட்சி பெயரை பதிவு செய்யுமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அமரீந்தர் சிங் விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அமரீந்தர் சிங் பதிவிட்டுள்ளார். நேற்று டெல்லியில் பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, அமரீந்தர் சிங் சந்தித்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உறுதி செய்தார்.
இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணி தேர்தலில் 101 சதவீதம் வெற்றி பெறும். எந்தத் தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு நிச்சயம் என்பதன் அடிப்படையில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என தெரிவித்தார். மேலும்பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…