இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் காலமானார்…!

இமாசலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவருமான வீரபத்ர சிங் காலமானார்.
இமாசலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவருமான வீரபத்ர சிங் (84) கடந்த 2 மாதங்களில் இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் தோய்வு ஏற்பட்டது.
இதனை அடுத்து கடந்த திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வீரபத்ர சிங் அவர்கள், ஒன்பது முறை எம்.எல்.ஏவாகவும், ஐந்து முறை எம்.பியாகவும், 6 முறை இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025