பாஜக முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
பாஜக முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா. இவர் கடந்த 2018-ம் ஆண்டு பாஜக-வில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், தற்போது இவர், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதே அக்கட்சியில் இணைந்து, அவரை ஆதரிக்க சரியான தருணம் என்றும், இந்தியாவின் நீதித்துறை மற்றும் ஜனநாயக அமைப்புகள் அனைத்துமே பலவீனமாகிவிட்டதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஜனநாயகத்தின் வலிமை, ஜனநாயக அமைப்புகளில் தான் உள்ளது என்றும், நாட்டு முன் எப்போதும் இல்லாத அளவில் மிக மோசமான சூழலை எதிர்கொண்டிருப்பதாகவும், வாஜிபாயின் ஆட்சி காலத்தில் பாரதிய ஜனதா ஒருமித்த கருத்தை நம்பியதாகவும், ஆனால், தற்போதைய பாரதிய ஜனதா அரசு மாற்று கருத்தை நசுக்குவதையும், வெல்வதையும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…