அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் காலமானார்..!
அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் காலமானார். அவருக்கு வயது 86. ஆகஸ்ட் 25 அன்று கொரோனா வைரசால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு, அவர் நவம்பர் 2 ஆம் தேதி மீண்டும் பல உறுப்பு செயலிழப்பால் கவுகாத்தியில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிசைப் பெற்று வந்த நிலையில், தருண் கோகாய் உயிரிழந்தார்.
அசாமில் இருந்து ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினரும், இரண்டு முறை மத்திய அமைச்சருமான கோகாய் 2001 ல் டெல்லியில் இருந்து தனது சொந்த மாநிலத் திற்கு திரும்பினார்.