உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை ஆய்வு மையம்!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது என அறிவிப்பு.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கக்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் பிப். 1ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருகோணமலைக்கு கிழக்கு – தென்கிழக்கே 670 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுளத்து.
முதலில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு – தென்மேற்கு திசையை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை தெற்கு – தென் மேற்கு திசை நோக்க்கி நகர்ந்து பிப்ரவரி 1-ஆம் தேதி இலங்கையில் கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.