விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலை குறித்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி !
பிரதமர் நரேந்திர மோடி விளைபொருளுக்கான உற்பத்திச் செலவைவிடக் குறைந்தது ஒன்றரைமடங்கு இருக்குமாறு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் எனப் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பூசா வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து விவசாயிகளிடையே குழப்பமான கருத்துக்கள் பரப்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு விளக்கம் அளித்த அவர், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது உற்பத்திச் செலவைவிடக் குறைந்தது ஒன்றரை மடங்கு இருக்கும் எனத் தெரிவித்தார். வேலையாட்களுக்கான கூலி, கருவிகளுக்கான செலவு அல்லது வாடகை, உரங்கள் மற்றும் விதைகளுக்கான விலை, நீர்ப்பாசனச் செலவு, நிலவரி, நடப்பு முதலுக்கான வட்டி, குத்தகை நிலத்துக்கான வாடகை உள்ளிட்ட அனைத்தும் உற்பத்திச் செலவில் அடங்கும் எனக் குறிப்பிட்டார். அத்துடன் உழவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் செய்த வேலைக்கான கூலியும் உற்பத்திச் செலவில் அடங்கும் எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.