அமெரிக்க பாடபுத்தகத்தில் இடம்பெற்ற “Forest man of India” வியக்கவைக்கும் விவசாயி

தரிசு மண்ணில் 550 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய ’Forest man of India’ என்று அழைக்கப்படும் அசாமைச் சேர்ந்த 57 வயது விவசாயி ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு அமெரிக்க பாடப்புத்தகங்களில் பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது.
கிழக்கு அசாமில் பகுதியில் மஜூலித் தீவின் சுற்றுச்சூழல் கெடுவதை கண்டு சிறுவயது முதலே கவலைகொண்ட ஜாதவ் பயேங், மரங்களை நடத்தொடங்கினார்.
அம்மரங்கள் காடுகளாக வளரும் வகையில் தனது அயாராத உழைப்பினால் 550 ஹெக்டர் பரப்பளில் காட்டை உருவாக்கியுள்ளார்.
இவர் உருவாக்கிய காட்டில் யானை, காண்டாமிருகம், புலி என பல விலங்கினங்களும் வாழத்தொடங்கி வருகிறது.
விவசாயி ஜாதவ் பயேங் சாதனையை சிறப்பிக்கும் வகையில் பத்மஸ்ரீ பட்டமும், கர்மயோகி விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பிரிஸ்டெல் கனெக்டிக்கட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் அசாம் ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.
அங்கு பயிலும் மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வியில் ஒரு பகுதியாக விவசாயி ஜாதவின் சாதனைகளைக் குறித்து படிக்கிறார்கள் என்று அங்கு பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி ஆசிரியர் நவாமி சர்மா தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025