வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா பயணம்..!
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகின்ற 24ஆம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகின்ற 24-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். மே 24 முதல் 28 ஆம் தேதி வரை அமெரிக்காவில் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணமானது, கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும், இந்தியாவில் தடை இன்றி தடுப்பூசி கிடைப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தடுப்புச் உற்பத்தி குறைந்ததால் கடும் தட்டுப்பாடு நிறுவியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மூன்று கோடி தடுப்புசி கிடைத்த நிலையில், கடந்த வாரம் ஒரு கோடியாக குறைந்துவிட்டது.