முககவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் – குஜராத் முதல்வர்.!
குஜராத்தில் ஆகஸ்ட் 1 முதல் முககவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ்க்கான தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையில் உள்ளதை அடுத்து, தற்போது கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க முககவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதால் பல இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முககவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு பல இடங்களில் அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் முதலில் முககவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு ரூ. 200அபராதம் விதித்த பின்னரும் பலர் சாதரணமாக வெளியே சுற்றி திரிகின்றனர். எனவே குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது .
எனவே குஜராத் மாநில அரசு தற்போது முககவசம் அணிவதை கட்டாயமாக்கி, மீறுபவர்களிக்கு விதிக்கப்படும் அபராதத்தையும் உயர்த்தியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 1 முதல் வீட்டை விட்டு வெளியே முககவசம் அணியாமல் சென்றால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.