கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து முதல்முறையாக டெல்லியில் தொற்று பாதிப்பு பூஜ்ஜியமாக பதிவு..!
டெல்லியில் மார்ச் 2020ல் தொற்றுநோய் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் பூஜ்ஜியம் கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் முதலில் சீனாவில் தான் பரவத் தொடங்கியது. அதனை தொடர்ந்து இந்த தொற்றானது உலக நாடுகள் முழுவதிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்தது.
இதனையடுத்து ஒவ்வொரு நாட்டின் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த கொரோனா வைரஸானது புதிய புதிய வகையாக பரவி வருகிறது.
சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்து இருந்தாலும் ஆங்காங்கே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் இருந்து கொண்டே தான் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் தலைநகர் டெல்லியை பொருத்தவரையில் மார்ச் 2020ல் தொற்றுநோய் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் பூஜ்ஜியம் கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.