முதல் முறையாக, இந்திய ரயில்வே பங்களாதேஷுக்கு சிறப்பு பார்சல் ரயிலை இயக்கியது.!
ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிளகாய் சாகுபடிக்கு பெயர் பெற்றவை. இந்தப் மிளகாயின் தனித்துவத்தை சர்வதேச அளவில் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த உலர் மிளகாயை சாலை வழியாக ஆந்திர மாநில விவசாயிகள் பங்களாதேஷுக்கு கொண்டு செல்கின்றனர்.
சாலை வழியாக சென்றால் ஒரு டன்னுக்கு ரூ.7000 ரூ வரை செலவாகும். இப்போது நாடு முழுவதும் பிற்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த பொருள்களை சாலை வழியாகக் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், ரயில்வே ஊழியர்களும், அதிகாரிகளும் மிளகாய் ஏற்றி செல்லும் குழுவினரை சந்தித்து ரயில் மூலம் அனுப்புவது குறித்த விளக்கினர்.
இதை தொடர்ந்து, சரக்கு ரயில்கள் ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாக 500 டன் வரை கொண்டு செல்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸை பங்களாதேஷுக்கு இயக்கியது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் 16 பார்சல் வேகன்கள் உள்ளது.
ஒவ்வொரு பார்சல் வேனிலும் சுமார் 19.9 டன் எடை ஏற்றப்படுகிறது. இதனால், சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் ஒரு முறைக்கு 384 டன் மிளகாயை எடுத்து செல்லும். இந்த ரயில் மூலம் எடுத்துச் செல்ல ஒரு டன்னுக்கு ரூ. 4,608 ரூபாய் செலவாகிறது. இதுவே சாலை வழியாக எடுத்து சென்றால் ஒரு டன்னுக்கு ரூ.7,000 செலவாகிறது.
கொரோனா காலத்தில் அத்தியாவசியப் பொருள்களான மருத்துவப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், உணவு போன்றவற்றை எடுத்து செல்ல பார்சல் ரயில் போக்குவரத்தை அதிகரிக்க இந்திய ரயில்வே நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த மார்ச் 22 -ம் தேதி முதல் கடந்த 11 -ஆம் தேதி வரை 4434 பார்சல் ரயில்கள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.