உலகில் முதல்முறையாக மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி!
உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த மருந்துக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் இந்த மருந்து தடுப்பு மருந்தை அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் பூஸ்டர் டோஸாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூக்கு வழியாக செலுத்தக் கூடிய இந்த தடுப்பு மருந்தை கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கிய பாரத் பயோடெக் நிறுவனம் தான் தற்போது மூக்கு வழியாக செலுத்தப்படும் iNCOVACC கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிந்துள்ளது இந்த நிறுவனம் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இதை உருவாக்கி உள்ளது. இந்த இந்த தடுப்பு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.