இந்திய குடிமைப் பணிகளில் முதல் முறையாக.. பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி.!

Indian civil service

ஹைதராபாத்: IRS அதிகாரி எம்.அனுசுயாவின் கோரிக்கையை ஏற்று அவரது பெயரை அனுகதிர் சூர்யா என்றும், அவரது பாலினத்தை ஆணாகவும் மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய குடிமைப் பணிகளில் முதல்முறையாக, ஹைதராபாத்தில் இணை ஆணையராக நியமிக்கப்பட்ட IRS அதிகாரியின் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது நிதியமைச்சகம்.

எம்.அனுசுயா என்ற பெயர் எம்.அனுகதிர் என மாற்றப்பட்டு, பெண் பாலினத்தில் இருந்து ஆணாக மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய சிவில் சர்வீஸ் வரலாற்றில் ஒரு அதிகாரி இவ்வளவு அங்கீகாரமும் அனுமதியும் பெறுவது இதுவே முதல் முறை.

இவர், சென்னை மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மேலும் அங்கு அவர் சைபர் சட்டம் மற்றும் சைபர் தடயவியல் ஆகியவற்றில் பிஜி டிப்ளமோ படித்து முடித்துள்ளார்.

சூர்யா 2013-இல் சென்னையில் உதவி ஆணையராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதற்குப் பிறகு, 2018 இல் அவர் துணை ஆணையராகப் பதவி வகித்தார். கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (செஸ்டாட்) தலைமை ஆணையரின் அலுவலகத்தில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்