இந்தியாவில் முதன் முறையாக ஐ .ஏ.எஸ் ஆன பார்வையற்ற பெண்..!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உல்ஹாஸ் நகரை சார்ந்தவர் பிராஞ்ஜல் பாட்டில்(31). இவர் தனது ஆறு வயதில் பார்வை இழந்தார். பின்னர் அவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வில் கவனம் செலுத்தினார்.
பின்னர் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் 773 வது இடம் பிடித்ததால் அவருக்கு இந்திய ரயில்வே துறையில் வேலை கிடைத்தது. பார்வைக்குறைபாடு இருந்ததால் பணி ரத்து செய்யப்பட்டது. பின்னர் மனம் தளராமல் 2017-ம் ஆண்டு மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார்.இந்த தேர்வில் 124 -வது இடத்தை பிடித்தார்.
இதன் மூலம் இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ .ஏ.எஸ் அதிகாரி என்ற சிறப்பை பெற்றார். பின்னர் எர்ணாகுளத்தின் உதவி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் துணை மாவட்ட ஆட்சியராக பிராஞ்ஜல் பாட்டில் நேற்று பதவி ஏற்றார். ஏற்கனவே எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவத்தின் மூலமாக இந்த பதவி அவருக்கு கொடுக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025