இந்தியாவில் முதன் முதலாக சாதி வாரி கணக்கெடுப்பு.! 500 கோடி செலவில் பீகார் அரசின் புத்தாண்டு தொடக்கம்…
இந்தியாவில் முதன் முதலாக பீகாரில் ஜனவரி 7முதல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சாதி வாரியிலனா கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் மாநில அரசுகள் வைத்து வருகின்றன.
இதில் முதற்கட்டமாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அதற்கான முன்னெடுப்பை தொடங்கியுள்ளார். பீகாரில் புத்தாண்டு முடிந்ததும், ஜனவரி 7ஆம் தேதி முதல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மே மாதம் வரையில் இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். 2 கட்டமாக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.