வரலாற்றில் முதன் முறையாக தை திங்கள் முதல் நாள் உச்சநீதிமன்றம் விடுமுறை!

இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக தை திங்கள் முதல் நாளான தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பண்டிகைக்கும் உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் தமிழர்களால் கொண்டாடப்படும் தை திங்கள் முதல் நாளாம் பொங்கல் தினத்திற்கு தேசிய அங்கீகாரம் கொடுக்கப்பட்ட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்ததுடன், தமிழர்களின் ஆசைகளில் ஒன்றாகவும் அது உள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு வருகின்ற 2021 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியியல் உள்ளனர். பொங்கல் அன்று உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை கொடுப்பது இதுவே முதன் முறை எனவும் கூறப்படுகிறது. விடுமுறை கொடுத்தது போல பொங்கல் தினத்தை தேசிய அளவில் அங்கீகரித்து, தேசிய அளவிலான பண்டிகை என அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தமிழர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.