வரலாற்றில் முதல் முறை..திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.140.34 கோடி உண்டியல் காணிக்கை!
திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக ரூ.140.34 கோடி உண்டியல் காணிக்கை என தகவல்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் 22.22 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து காணிக்கையாக ரூ.140.34 கோடி செலுத்தியுள்ளனர்.
திருப்பதி கோயிலில் 1.5 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, 10.85 லட்சம் தலைமுடி காணிக்கை, 47.74 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது என்று செயல் அதிகாரி தர்மா ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.