சென்னை : சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் முதன் முதலாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்ப்பட்டுள்ளது. – மத்திய உள்துறை அமைச்சகம்.
நாடளுமன்றத்தில் முன்னர் நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை திருத்த சட்டமானது (CAA) கடந்த மார்ச் மாதம் 11ஆம் அமல்படுத்தப்பட்டது. அச்சட்டத்தின் கீழ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து டிசம்பர் 31, 2014ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்குள் வந்து குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் என இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மார்ச் 11 முதல் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது முதன் முதலாக 14 பேருக்கு சிஏஏ சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த C.A.A சட்டமானது அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர்களுக்கு பொருந்தாது என்றும், இலங்கையில் இருந்து தமிழகம் வந்து அகதிகளாக இருப்பவர்களுக்கும் இது பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…