சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் முதன் முதலாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை.! 

Ministry Of Home Affairs

சென்னை : சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் முதன் முதலாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்ப்பட்டுள்ளது. – மத்திய உள்துறை அமைச்சகம்.

நாடளுமன்றத்தில் முன்னர் நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை திருத்த சட்டமானது (CAA) கடந்த மார்ச் மாதம் 11ஆம் அமல்படுத்தப்பட்டது.  அச்சட்டத்தின் கீழ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து டிசம்பர் 31, 2014ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்குள் வந்து குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் என இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மார்ச் 11 முதல் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது முதன் முதலாக 14 பேருக்கு சிஏஏ சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த C.A.A சட்டமானது அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர்களுக்கு பொருந்தாது என்றும், இலங்கையில் இருந்து தமிழகம் வந்து அகதிகளாக இருப்பவர்களுக்கும் இது பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்