ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் கட்சியை விட தேசமே பெரியது..! பிரதமர் மோடி பேச்சு..!

PM Modi Speech

ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் கட்சியை விட தேசமே பெரியது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தின் ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து ஒரே நேரத்தில் ஐந்து புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த 5 ரயில்கள் நாட்டில் உள்ள மொத்த வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையை 23 ஆக உயர்த்தி உள்ளது

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆளுநர் மங்குபாய் சி படேல், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷா, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: 5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி, இன்று இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பெற்றதற்காக மத்தியப் பிரதேச மக்களை நான் வாழ்த்துகிறேன். போபாலில் இருந்து ஜபல்பூர் வரையிலான பயணம் இப்போது வேகமாகவும் வசதியாகவும் இருக்கும். வந்தே பாரத் ரயில் மாநிலத்தில் இணைப்பை அதிகரிக்கும் என்று கூறினார்.

மேலும், பாஜகவின் மிகப்பெரிய சக்தி அதன் தொண்டர்கள்தான். இன்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ஜே.பி.நட்டாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதன் மூலம் சுமார் 10 லட்சம் பாஜக தொண்டர்களிடம் பேச முடிந்தது. எந்த அரசியல் கட்சியின் வரலாற்றிலும் இதுபோன்ற மெய்நிகர் திட்டம் நடந்ததில்லை.

குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து கட்சி நடத்துபவர்கள் பாஜகவினர் இல்லை. வெயிலிலும், குளிர்காலத்திலும், இடைவிடாத மழையிலும் கூட தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்று பாஜகவினர் பணியாற்றுவார்கள். ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் கட்சியை விட தேசமே பெரியது. அவர்களுடன் நான் பழகுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்