புட் பாய்சன் – 3 குழந்தைகள் உயிரிழப்பு, உயிர் பிழைத்த தாய்!
ஃபுட் பாய்சன் ஆனதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது தாயார் மற்றும் உயிர் தப்பியுள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள சதாராவில் உணவு நச்சுத்தன்மை ஆனதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த உணவை உட்கொண்டாலும் அவரது தாயார் மட்டும் உயிர் தப்பிய நிலையில், மூன்று வயதுடைய ஆயூஷி , 8 வயதுடைய ஆருஷி எனும் குழந்தையும், 9 வயதுடைய குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், தாய் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு அவ்விடத்திற்கு சென்று விசாரித்த காவல் துறையினர் கூறுகையில், இரவு உணவிற்கு பின்பு தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், 4 பேரும் இந்த உணவை சாப்பிட்டாலும் 3 மகள்களும் திடீரென கடுமையாக நோய்வாய்ப்பட்டு வயிற்றுவலி மற்றும் வாந்தி எடுக்கத் துவங்கியதால் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் மூன்று குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தாய் மற்றும் உயிர் பிழைத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.