மாநில அரசுகளுக்கு 3 மாத கடன் அடிப்படையில் உணவுப் பொருட்கள் – நிர்மலா சீதாராமன்
மாநில அரசுகளுக்கு 3 மாத கடன் அடிப்படையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்ய கடன் அடிப்படையில் பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இந்திய உணவுக் கழகம் மூலம் 3 மாதங்களுக்கான உணவுப் பொருட்களை பெற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படாமல் இருக்க மத்திய அரசு இந்த சலுகையை வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மெனெச்சடிகை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் வரும் மார்ச் 31 ம் தேதி வரை சில மாநிலங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் சில மாநிலங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாநில அரசுகளுக்கு 3 மாத கடன் அடிப்படையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.