அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் இழந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து, 5 கட்டமாக இந்த பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது கூறுகையில், அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என தெரிவித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மானாவாரி சாகுபடியின் பரப்பளவு 44% உயர்ந்துள்ளது. உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என கூறியுள்ளார். வேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. உணவு தானிய உற்பத்தி 3.7 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது என ஆளுநர் சக்திகாந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லி : திருமணம், கலாச்சாரம், பண்பாடு என தொன்மை வாய்ந்த இந்திய சமூகம் தற்போது வேகமாக நகர்ந்து வரும் நவீன…
மலேசியா : சினிமாவில் ஹீரோ எப்படி தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் வில்லனிடமிருந்து காப்பாற்றுகிறார். அதேபோல், திரைப்படங்களில் வருவதுபோல் வில்லனாக நடிக்க,…
டெல்லி : ஸோஹோ கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார். முழு…
சென்னை : தனது அடுத்த மூன்று படங்கள் குறித்த அறிவிப்புகள் தனது பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகுமென எக்ஸ்…
டெல்லி : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன்…
டோராடூன் : பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் நிறைவேற்றம் செய்ய வேண்டும் என்பது பாஜகவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.…