‘உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது’ – சக்திகாந்த தாஸ்

Default Image

அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் இழந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து, 5 கட்டமாக இந்த பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது கூறுகையில், அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என தெரிவித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மானாவாரி சாகுபடியின் பரப்பளவு 44% உயர்ந்துள்ளது. உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என கூறியுள்ளார். வேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. உணவு தானிய உற்பத்தி 3.7 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது என ஆளுநர் சக்திகாந்தா தாஸ் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்