கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றதையடுத்து இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு…!
கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள், இன்று ஆளுநர் மாளிகையில் மதியம் 2:15 மணியளவில் பதவியேற்க உள்ளனர்.
கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா அவர்கள் பதவி விலகியதை தொடர்ந்து, புதிய முதலமைச்சராக, எடியூரப்பா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து, கடந்த ஜூலை 28-ஆம் தேதி பசவராஜ் பொம்மை அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றார்.
இவருக்கும் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிலையில், கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள், இன்று ஆளுநர் மாளிகையில் மதியம் 2:15 மணியளவில் பதவியேற்க உள்ளதாக கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.